TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநிலத்தின் அருகி வரும் உயிரினங்களின் வளங்காப்பு நிதியம்

December 5 , 2024 18 days 126 0
  • சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு தொடக்கத் தொகுப்பு நிதியுடன் தமிழ்நாடு மாநிலத்தின் அருகி வரும் உயிரினங்களின் வளங்காப்பு நிதியத்தினை நிறுவுவதற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • இது அருகி வரும் மற்றும் மிகவும் அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 5 கோடி ரூபாய் மதிப்பிலான அரசாங்கத்தின் பங்களிப்புடன் இந்த நிதி தொடங்கப்பட உள்ளது.
  • அரசு நிறுவனங்கள், பெருநிறுவனச் சமூகப் பொறுப்புப் பங்களிப்புகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச நன்கொடைகள் மூலம் கூடுதல் நிதி திரட்டப்படும்.
  • கூடுதலாக, இந்த நிதி நம் மாநிலத்தின் புனித தோப்புத் திட்டங்கள் மூலம் அரசின் கலாச்சார வளங்காப்பு முறையினையும் பயன்படுத்த உள்ளது.
  • வளங்காப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக என்று 1949 அம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகள் வளங்காப்புச் சட்டம் மற்றும் 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு மலைப் பாதுகாப்புச் சட்டம், 1955 ஆகியவற்றை அரசு பயன்படுத்துகிறது.
  • ஆரம்பத்தில், இந்த நிதியத்தின் மேற்பார்வைப் பணிகளை முதுமலை புலிகள் வளங் காப்பக அறக்கட்டளையானது மேற்கொள்ளும்.
  • பின்பு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தமிழ்நாடு மின்னாற்றல் நிதிக் கழகம் அல்லது தமிழ்நாடு போக்குவரத்து மேம்பாட்டு நிதிக் கழகத்தில் இந்த நிதி கையாளப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்