2023-24 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழகத்தின் மொத்த சந்தைக் கடன்கள் 25,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் இதன் மதிப்பு 8,000 கோடி ரூபாயாக இருந்தது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாத காலகட்டத்தில் பதிவான கடன்களில் திருப்பிச் செலுத்தப் பட்டக் கடன்களை நீக்கியப் பிறகு நிகரக் கடன்கள் 17,000 கோடி ரூபாயாக உள்ளது.
இது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாத காலக் கட்டத்தில் சுமார் 5,528 கோடி ரூபாயாக இருந்தது.
மாநில மேம்பாட்டுக் கடன்கள் (SDL) எனப்படும் பத்திரங்களின் ஏலத்தின் மூலம் சந்தையில் இருந்து மாநில அரசுகள் கடன் பெறுகின்றன.
மாநில அரசுகள் கடன் பெறுவதற்கான உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
மாநில அரசுகள் 2023-24 ஆம் ஆண்டிற்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3% வரை கடன் பெறலாம்.
மின் துறைச் சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்காக மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 0.5% கூடுதல் கடன் பெறுவதற்கு மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப் படுகிறது.