TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள முனைவர் பட்டம் பெற்ற பட்டதாரிகள்

February 10 , 2023 528 days 330 0
  • நாட்டிலேயே அதிக முனைவர் பட்டம் பெற்ற பட்டதாரிகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு மீண்டும் உருவாகியுள்ளது.
  • 2020-21 ஆம் கல்வியாண்டில் 3,206 முனைவர் பட்டம் பெற்ற பட்டதாரிகளை இந்த மாநிலம் உருவாக்கியுள்ளது.
  • இதில் 1,493 பெண்கள் மற்றும் 1,713 ஆண்கள் ஆராய்ச்சி அறிஞர்கள் ஆவர்.
  • 2,217 முனைவர் பட்டங்களை வழங்கியதன் மூலம் உத்தரப் பிரதேச மாநிலமானது இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • கர்நாடகா மற்றும் டெல்லி ஆகியவை முறையே 2,125 மற்றும் 2,055 முனைவர் பட்டங்களைப் பெற்ற பட்டதாரிகளை உருவாக்கி மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.
  • 2019-2020 ஆம் ஆண்டு உயர்கல்வி குறித்த அகில இந்திய ஆய்வறிக்கையின் படி, தமிழ்நாடு 5,324 முனைவர் பட்டங்களைப் பெற்ற மாணவர்களை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்