பாரம்பரியமாக, நவம்பர் 01 ஆம் தேதியானது மாநில மறுசீரமைப்புத் தினமாக அனுசரிக்கப் படுகிறது.
1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று, இந்தியாவில் மொழிவாரி மாநில மறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் செயல்முறையின் போது, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் அப்போதைய மதராஸ் மாநிலத்திலிருந்து "பிரிந்துச் சென்றன".
பின்னர் C.N. அண்ணாதுரை அவர்கள் இதன் முதலமைச்சராக இருந்த போது, 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்று சென்னை மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப் பட்டது.