TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்

January 16 , 2018 2375 days 1209 0
  • தமிழக அரசின் மாநில விருதுகள் திருவள்ளுவர் தினமான சனவரி 15 அன்று பிரபலமானவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ் சமுதாயத்துக்கு தொண்டாற்றிய ஒன்பது பேருக்கு அரசின் விருதுகள் வழங்கப்பட்டன.
  • விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூ. 1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்பட்டு பொன்னாடையும் அணிவிக்கப்பட்டது.
  • தமிழக அரசின் ஒன்பது விருதுகள்:
    • திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பங்களித்தமைக்காக முனைவர் கோ. பெரியண்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
    • தந்தை பெரியார் விருது, சமூக நலத்துறை அமைச்சராக இருந்த போது எடுக்கப்பட்ட நல்முயற்சிகளுக்காக பா. வளர்மதிக்கு வழங்கப்பட்டது.
    • மலைவாழ் சமூக மாணவர்களுக்கு கல்வித் தொண்டாற்றிய டாக்டர். கே.ஜே. ஜார்ஜுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது.
    • அண்ணா தொழிற்சங்கத்தின் நிறுவன உறுப்பினரான அ. சுப்ரமணியத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது.
    • மகாகவி பாரதியார் விருது - முனைவர் க. பாலசுப்ரமணியன் (எ) பாரதிபாலன்
    • பாவேந்தர் பாரதிதாசன் விருது - எழுத்தாளர் கே. ஜீவபாரதி
    • தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – எழுத்தாளர் வை. பாலகுமாரன்
    • மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க கல்வியாளர் பேராசிரியர் முனைவர் பா. மருதநாயகத்துக்கு வழங்கப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்