TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை, 2024 - வரைவு அறிக்கை

July 4 , 2024 143 days 775 0
  • 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கைக்கு (NEP) எதிராக தமிழகத்தில் மாநிலக் கல்விக் கொள்கையின் வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.
  • நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு இந்த வரைவு அறிக்கையினை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றினை பயிற்று மொழியாக கொண்ட இரு மொழிக் கொள்கையை தொடர்வதோடு, 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதற்கும், தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
  • அனைத்து உயர்கல்விப் படிப்புகளுக்குமானச் சேர்க்கைக்கு எந்தவிதமான நுழைவுத் தேர்வையும் நடத்துவதற்கு எதிராக அக்குழு பரிந்துரைத்துள்ளது.
  • அனைத்து உயர்கல்விப் படிப்புகளுக்குமான சேர்க்கைக்கு பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு வாரியத் தேர்வுகள் இரண்டிலும் இருந்து பெறப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண்கள் தான் அடிப்படையாக இருக்க வேண்டும்.
  • தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளை அரசுப் பள்ளிகளுக்கு இணையாக நடத்தப்பட வேண்டும்.
  • தமிழ்நாட்டில் பல்வேறு தனிநபர்கள் / பெரு நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகள் / கல்லூரிகளுக்கு இணையாக இயங்கும் பயிற்சி மையங்களை அமைப்பு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் "தடை" செய்ய அக்குழுவானது பரிந்துரைத்துள்ளது.
  • பயிற்சி மையங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க உரிய அதிகாரங்களைக் கொண்ட ஒழுங்குமுறை ஆணையத்தினை உருவாக்கி அரசு செயல்படுத்த வேண்டும்.
  • அனைத்துத் தனியார் உயர்கல்வி நிறுவனங்களையும் வேறுபாடின்றி ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது.
  • தனியார் நிர்வாகத்தினால் நடத்தப்படும் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான கட்டண வசூலை முறைப்படுத்த 1976 ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அக்குழு கோரியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்