சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 39A சட்டப்பிரிவானது, வறுமை அல்லது இதரக் குறைபாடுகளால் வாடும் குடிமக்களுக்கு இலவச சட்ட சேவையை வழங்குவதற்கு மாநில அரசுக்கு வலியுறுத்துகிறது.
1987 ஆம் ஆண்டு சட்டப் பணிகள் சட்டமானது சமுதாயத்தின் நலிவடைந்த சமூகத்தினருக்கு இலவசமான மற்றும் தரமான சட்ட சேவையை வழங்குவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.