தமிழ்நாடு மாநில அரசானது அருட்தந்தை ஜோ அருண் என்பவரைத் தமிழக மாநிலச் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமித்து அந்த ஆணையத்தினை மறுசீரமைத்துள்ளது.
தமிழக மாநில அரசானது M.M. அப்துல் குத்தூஸ் என்ற இறையன்பன் குத்தூஸ் என்பவரை அதன் துணைத் தலைவராக நியமித்துள்ளது.
ஹாமில்டன் வெல்சன், A. சொர்ணராஜ், நாகூர் A.H. நஜிமுதீன், பிரவீன் குமார் தத்தியா, ராஜேந்திர பிரசாத், ரமீத் கபூர், J. முகமது ரஃபி மற்றும் S.வசந்த் ஆகியோரையும் அதன் உறுப்பினர்களாக நியமித்துள்ளது.
தமிழக மாநில அரசானது, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக C.பெர்னாண்டாஸ் ரத்தின ராஜாவினை நியமித்துள்ளது.