இந்த ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் எண்ணிக்கை மதிப்பீட்டின்படி, தமிழகத்தில் சுமார் 3,063 யானைகள் உள்ளன.
இது 2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முந்தையக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப் பட்ட 2,961 யானைகள் என்ற எண்ணிக்கையின் விட அதிகமாகும்.
யானைகளின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையானது சத்தியமங்கலம் புலிகள் வளங் காப்பகம் STR)-சத்தியமங்கலம் வனப் பிரிவில் (372) அதிகமாக பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து கோயம்புத்தூர் (336), STR-ஹாசனூர் (279), MTR-உதகை (271), MTR-மசினகுடி (263), ஓசூர் (240) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஐந்து யானைகள் வளங்காப்பகங்களில், நீலகிரி கிழக்குத் தொடர்ச்சி மலைகள் காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
அதைத் தொடர்ந்து நிலம்பூர்-அமைதிப் பள்ளத்தாக்கு-கோவை, அகத்தியர்மலை, ஆனைமலை-பரம்பிக்குளம் மற்றும் பெரியார் ஆகிய பகுதிகளில் அதிக எண்ணிக்கை அளவில் யானைகள் உள்ளன.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் யானைகள் வளங்காப்பகங்கள் இரண்டிலும் ஒருசேர மாநிலத்தின் மொத்த யானைகளின் எண்ணிக்கையில் 70% முதல் 80% வரையிலான யானைகள் உள்ளன.
இந்த வளங்காப்பகங்கள் ஆனது, கேரளாவில் உள்ள வயநாடு மற்றும் நிலம்பூர் காப்பகங்களுடனும், கர்நாடகாவில் உள்ள மைசூர் காப்புக் காடுகளுடனும் சேர்ந்து நீலகிரி-கிழக்குத் தொடர்ச்சி மலையின் நிலப்பரப்புகளாக உள்ளன.
3,200 யானைகள் என்ற எண்ணிக்கையில் தமிழ்நாட்டின் நிலப்பரப்பு அதிகபட்ச தாங்கு திறனை எட்டுவதால் அதற்கு மேல் வசிக்க இயலாது.