TNPSC Thervupettagam

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் 2023

October 30 , 2023 392 days 639 0
  • தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில், ஆண் வாக்காளர்களை விட (3 கோடி) பெண் வாக்காளர்கள் (3.1 கோடி) எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
  • மொத்தமுள்ள 6.1 கோடி வாக்காளர்களில். 8,016 பேர் மூன்றாம் பாலினத்தவராகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
  • கிருஷ்ணகிரி, தருமபுரி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மட்டும் தான் ஆண் வாக்காளர்கள் பெண் வாக்காளர்களை விட அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர்.
  • செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்காளர்கள் (6.52 லட்சம்) உள்ளனர்.
  • நாகப்பட்டின மாவட்டத்தின் கீழ்வேளூர் தொகுதியில் மிகக் குறைவான வாக்காளர்கள் (1.69 லட்சம்) உள்ளனர்.
  • வாக்காளர் எண்ணிக்கையில் சென்னை (38.68 லட்சம்), திருவள்ளூர் (33.34 லட்சம்), கோவை (30.49 லட்சம்) மாவட்டங்கள் முதலிடத்தில் உள்ளன.
  • அரியலூர் (5.07 லட்சம்), நாகப்பட்டினம் (5.41 லட்சம்), பெரம்பலூர் (5.62 லட்சம்), நீலகிரி (5.7 லட்சம்) ஆகியவை பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன.
  • தமிழக மாநிலத்தில் 120 வயதுக்கு மேற்பட்ட 137 வாக்காளர்கள் உள்ளனர்.
  • மேலும் 110 முதல் 119 வயதுக்குட்பட்ட 381 வாக்காளர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்