தமிழ்நாடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் M.R.K. பன்னீர் செல்வம் தனது முதலாவது முழு அளவிலான 2022-2023 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
விவசாய நிலப்பரப்பை 53.50 லட்சம் ஏக்கராக அரசு உயர்த்தியுள்ளது.
மேலும், இயற்கை வேளாண்மைக்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததோடு, தினை உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தவும் முடிவு செய்யப் பட்டது.
வேளாண் சார்ந்த தொழில்களைத் தொடங்க 200 படித்த இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளது.
பட்டியலிடப்பட்ட சாதியினர்/ பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் சமுதாயத்தினைச் சேர்ந்த விவசாயிகளுக்கான மானியத்தை 20% உயர்த்தி, அதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் துவரம் பருப்புச் சாகுபடிக்காக சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும்.
மயிலாடுதுறையில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய மண் பரிசோதனை மையம் அமைக்கப் படும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தமிழக அரசு 5,157 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
மயிலாடுதுறையில் NPKR. ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மீண்டும் திறக்கப் படும்.
பாரம்பரிய வகை காய்கறிகளைச் சாகுபடி செய்வதற்கு புத்துயிர் அளிப்பதற்காக ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பருவம் சாராத தக்காளி சாகுபடிக்கு, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக 10 லட்சம் பனை விதைகளை விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டில், 126 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
381 கோடி ரூபாய் செலவில் தேனி, திண்டிவனம், மணப்பாறை ஆகிய இடங்களில் மூன்று உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
வெல்லம் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபடுத்தப்படுவர்.
தமிழக முதல்வரின் திட்டத்தின் கீழ் 3,000 சூரிய ஒளியில் இயங்கும் பம்புகள் அமைக்கப் படும்.
டிஜிட்டல் வேளாண்மைக்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்கச் செய்வதற்காக இயந்திரங்கள் வாங்குவதற்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவானது அமைக்கப்படும்.
விவசாயத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாநில அரசு விருது வழங்கப்படும்.
மாநில மற்றும் மாவட்ட அளவில் தினை திருவிழாக்கள் நடத்தப்படும்.
விதைப்பு முதல் விற்பனை வரையிலான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் விவசாயிகளுக்காக ஒரு செயலியை அரசு வடிவமைத்துள்ளது.
தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காய்கறி சந்தை வளாகம் அமைக்கப்படும்.