இந்த ஆண்டு, தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் (TNDGE) ஆனது, மார்ச் 01 முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான உயர்நிலைக் கல்வி (HSE) பிளஸ் 2 தேர்வுகளை நடத்தியது.
தமிழ்நாடு +2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் 8,42,512 மாணவர்களும், 2020 ஆம் ஆண்டில் 7,79,931 மாணவர்களும், 2021 ஆம் ஆண்டில் 8,16,473 மாணவர்களும், 2022 ஆம் ஆண்டில் 8,06,277 மாணவர்களும் தேர்வு எழுதினர்.
இறுதியாக, 2023 ஆம் ஆண்டில், தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 8,03,385 ஆகக் குறைந்துள்ளது.
மொத்தம் 2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பதிவாகியுள்ளது.
இவற்றில் 397 அரசுப் பள்ளிகள் ஆகும்.
இந்த ஆண்டில் அறிவியல் பிரிவு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று உள்ளனர் (96.35%).
மொத்தம் 26,352 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்திலாவது 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 3,25,305 (92.37%)
தேர்ச்சி பெற்ற மாணவிகள்: 3,93,890 (96.44%)
மொத்த தேர்ச்சி சதவீதம்: 94.56 சதவீதம்
திருப்பூர் மாவட்டம் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.