மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக (MGNREGA - Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு 5 விருதுகளைப் பெற்றுள்ளது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் நிர்வாகத்திற்கான சிறப்பு விருதை நகராட்சி நிர்வாகம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர்P. வேலுமணி பெற்றார்.
ஜியோ MGNREGA திட்டத்தின்கீழ் மக்களுக்கு ஆதாரை ஏற்படுத்தித் தருதல் மற்றும் மாற்றித் தருதல் ஆகியவற்றில் சிறப்பான செயல்பாட்டிற்காக மாநில அரசு (தமிழ்நாடு) விருது பெற்றது.
கிராம சுவராஜ் அபியான் திட்டத்தின் கீழ் 7 திட்டங்களில் தன்னிறைவு அடைந்ததற்காக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தேசிய விருது பெற்றுள்ளது.
தஞ்சாவூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக அம்மாவட்ட ஆட்சியாளர்களான அண்ணாதுரை மற்றும் கௌரவிக்கப்பட்டனர்.