தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் R.N. ரவி இடையிலான வழக்கு தொடர்பான தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
மசோதாக்கள் குறித்து குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள் எடுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகளை நீதிமன்றம் சரிக்குச் சமமாக ரத்து செய்துள்ளது.
ஆளுநரின் தனிப்பட்ட அதிருப்தி, அரசியல் தேவை அல்லது வேறு ஏதேனும் "புறம்பான அல்லது பொருத்தமற்றப் பரிசீலனைகள்" போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் மறு பரிசீலனைக்காக என்று ஒதுக்கச் செய்வது அரசியலமைப்பால் கண்டிப்பாக அனுமதிக்கப் படாது என்று உச்ச நீதிமன்றமானது தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.
இந்தக் காரணங்களுக்காக ஓர் ஆளுநர் ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது அரசியலமைப்பு அடிப்படையிலான நீதிமன்றங்களால் உடனடியாக ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.
ஜனநாயகக் கொள்கைகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் தெளிவாக வரையறுக்கப்பட்ட காரணங்களின் மீதான அடிப்படையில் மட்டுமே ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் மறு பரிசீலனைக்கு ஒதுக்க வேண்டும் என்று நீதிமன்றமானது விளக்கியுள்ளது.
ஆளுநர் போதுமான காரணங்களை வழங்கத் தவறியதன் ஒரு அடிப்படையில் மாநில அரசுகள் அத்தகைய பரிசீலனை ஒதுக்கீட்டினை எதிர்த்து வழக்குத் தொடரலாம்.
ஒரு ஆளுநர் மூன்று மாத கால வரம்பைத் தாண்டி ஒரு மசோதாவினை நிலுவையில் வைத்திருந்தால், அந்த மாநில அரசு ஆனது செயலுறுத்தும் நீதிப்பேராணையின் கீழ் அதிகாரம் வாய்ந்த நீதிமன்றத்தை அணுகலாம்.
உயர் பதவிகளில் உள்ள அரசியலமைப்பு நிர்வாக அதிகாரிகள் அரசியலமைப்பின் விழுமியங்களால் வழி நடத்தப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் மிக வலுவாக நினைவூட்டி உள்ளது.