TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

July 22 , 2020 1645 days 8141 0
  • தமிழ்நாடு மாநில அரசானது தனது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை  மீண்டும் அமைத்துள்ளது.
  • ஓய்வு பெற்ற நீதிபதியான R தணிகாசலம் என்பவர் இந்த ஆணையத்தின் தலைவராக செயல்பட இருக்கின்றார்.
  • இது இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரின் (OBC – Other Backward Classes) பட்டியலில் சமூகத்தினரை சேர்த்தல் அல்லது இணைக்கப்படாமல் இருத்தல் குறித்த புகார்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்டுள்ளது.

பின்னணி

  • தமிழ்நாட்டில் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையமானது திமுக ஆட்சிக் காலத்தில் 1969 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று ஏற்படுத்தப்பட்டது.
  • இது சட்டநாதன் ஆணையம் என்று அழைக்கப் பட்டது.
  • சட்டநாதன் ஆணையமானது தமிழ்நாட்டில் உள்ள OBCயினரிடையேபசை  அடுக்கை” (Creamy Layer) அறிமுகப்படுத்தப் பரிந்துரைத்தது.
  • 1992 ஆம் ஆண்டின் மண்டல ஆணைய வழக்கு அல்லது இந்திரா சௌகானி வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில அரசானது நிரந்தரமாக தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தது.
  • இது 1993 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற நீதிபதியான K சண்முகம் என்பவரின் தலைமையின் கீழ் அமைக்கப் பட்டது.
  • இது இந்திய அரசியலமைப்பின் சரத்து 340ன் வரிசையில் சரத்து 16(4)ன் கீழ் அமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்