தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக தேசிய சராசரியை விட அதிகப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை தமிழகம் அடைந்து வருகிறது.
கடந்த ஆண்டின் அகில இந்திய சராசரி விகிதமான 4.2% என்ற விகிதத்திற்கு எதிராக, நமது மாநிலத்தின் செயல்திறன் (8.03%) கிட்டத்தட்ட இரு மடங்காக உள்ளது.
2011-12 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக வைத்து, நிலையான விலையில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தித் தரவுகளின் கணக்கீடானது செய்யப் பட்டு உள்ளது.
2019-20 ஆம் ஆண்டில் தனிநபர் வருமானத்தைப் பொருத்தவரை (நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு), தமிழ்நாட்டில் இது ரூபாய் 1,53,853 ஆகும். அகில இந்திய அளவில் இது ஆறாவது இடமாகும்.
2018-19 ஆம் ஆண்டில், இது ரூபாய் 1,42,941 ஆக இருந்தது. அதாவது இந்திய அளவில் இது 12வது இடத்தில் இருந்தது.
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பைப் பொருத்தவரை, மாநிலத்தின் தரவரிசையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
2019-20 ஆம் ஆண்டில், இது முதல் இடத்திற்குச் சென்றது, இதற்குக் காரணம் மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவின் தரவுகள் கிட்டாததாக இருக்கலாம்.
2019-20 ஆண்டிற்கான முன்கூட்டியே மதிப்பீடுகளின்படி, முதன்மைத் துறையின் வளர்ச்சி விகிதம் 6.08% ஆகவும், சேவைத் துறையின் வளர்ச்சி விகிதம் 6.63% ஆகவும் உள்ளது.
இரண்டாம் நிலைத் துறையானது இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது (10.02%).
இரண்டாம் நிலைத் துறையில், உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகள் முறையே 10.27% மற்றும் 10.49% என்ற இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தைக் கொண்டு உள்ளன.
முதன்மைத் துறையினுள் கூட, விவசாயப் பிரிவு 2018-19 ஆம் ஆண்டில் 5.8% ஆக இருந்த வளர்ச்சியை விட இந்த முறை அதிக வளர்ச்சி விகிதத்தை (7.43%) பதிவு செய்து உள்ளது.
முதன்மை நிலை, இரண்டாம் நிலை மற்றும் சேவைத் துறைகளுக்கான முந்தைய ஆண்டின் புள்ளி விவரங்கள் முறையே 8.49%, 6.49% மற்றும் 7.83% ஆகும்.