TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் மொழி சார் வரைபடம் 2011

July 16 , 2024 131 days 235 0
  • இது இந்தியத் தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையத்தினால் வெளியிடப்பட்டது.
  • இந்த வரைபடப் பதிவிற்கானப் பகுப்பாய்விற்கு 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் பயன்படுத்தப் பட்டுள்ளதால், மாநிலத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை 7,21,47,030 எனக் கணக்கில் கொள்ளப் பட்டுள்ளது.
  • மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 96.20% பேர் தமிழ் மொழியையும்; 8.05% பேர் தெலுங்கு மொழியையும்; 2.59% பேர் கன்னட மொழியையும்; மற்றும் 1.40% பேர் மலையாள மொழியையும் அவர்களின் தாய் மொழியாகவோ அல்லது அவர்களின் முதல் அல்லது இரண்டாவது துணை மொழியாகவோ கொண்டுள்ளனர்.
  • தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 18.49% பேர் ஆங்கிலம் மொழி பேசக் கூடியவர்கள் ஆவர்.
  • இந்த மாநிலத்தில் உள்ள ஒட்டு மொத்த மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பின்வரும் ஐந்து முக்கிய மொழிகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன - அவை தமிழ் (6,37,53,997), தெலுங்கு (42,34,302), கன்னடம் (12,86,175), உருது (12,64,537) ), மலையாளம் (7,26,096).
  • இது தவிர, பிற மொழிகளைப் பேசுபவர்கள் 8,81,923 பேர் ஆவர்.
  • இம்மாநிலத்தில் 24 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் மூன்று மொழிகளைப் பேசக் கூடியவர்களாக உள்ளனர்.
  • மும்மொழி பேசுபவர்களைத் தவிர்த்து, இந்த மாநிலத்தில் 1.79 கோடிக்கும் அதிகமான மக்கள் இரு மொழிகளைப் பேசக்கூடியவர்களாக உள்ளனர்.
  • 17 திராவிட மொழிகளில், 14 திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் என்ற அதே சமயத்தில் ஜடாபு, கோலாமி மற்றும் கோயா ஆகிய மொழிகள் தமிழகத்தில் பேசப் படவில்லை.
  • முக்கியமாக தென்னிந்தியாவில் 60 மில்லியன் மக்களும், உலகளவில் 68 மில்லியன் மக்களும் தமிழ் மொழி பேசுபவர்களாக உள்ளனர்.
  • 1991 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்ட, இந்தியாவின் முதலாவது மொழி சார் வரைபடமானது 2004 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்