இந்த கட்டமைப்பானது, வனத்துறையின் யானை இறப்பு தணிக்கை கட்டமைப்பிலிருந்து 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில், யானைகளானது முதுமை மற்றும் பட்டினியால் இறப்பதை விட மின்சாரம் தாக்கி இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
2010 ஆம் ஆண்டு முதல் 1,505 யானை இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அவற்றில் 159 அல்லது மொத்த இறப்புகளில் 10.5% மனித நடவடிக்கைகளால் ஏற்படுகின்றன என்று தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
வன விலங்குகளில் சுமார் 50 ஆண்டுகள் ஆயுட்காலத்துடன் 22 ஆண்டுகள் என்ற ஒரு தலைமுறையுடன் நீண்ட காலம் வாழும் பாலூட்டிகளில் யானைகள் ஒன்றாகும்.