தமிழ்நாடு மாநிலத்தின் வனப் பரப்பானது கடந்த பத்தாண்டுகளில் இருந்த அளவை விட 9.09% அதிகரித்து, 2,205.01 சதுர கிலோமீட்டர் பசுமைப் பரவலைக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் வனப் பரப்பளவு 24,245.21 சதுர கிலோமீட்டராக இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் அது 26,450.22 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.
2023 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையேயான ஒரு ஒப்பீடானது, மாநிலத்தில் சுமார் 61 சதுர கிலோமீட்டர் காடுகளின் இழப்பைக் குறிப்பிடுகிறது.
இதில் உரிமை அல்லது சட்ட அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், "வனப் பரவல்" என்ற சொல்லானது, குறைந்தபட்சம் ஒரு ஹெக்டேர் பரப்பளவு மற்றும் 10% அல்லது அதற்கு மேற்பட்ட மரங்களின் பரவல் கொண்ட அனைத்து நிலங்களையும் உள்ளடக்கியது.
மாநிலத்தின் மொத்த 26,450.22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காடுகளில்,
13% (3,586.19 சதுர கி.மீ.) மட்டுமே மிகவும் அடர்ந்த காடுகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளது,
41.7% (11,027.03 சதுர கி.மீ) மிதமான அடர்த்தியான காடுகளாகவும், மற்றும்
44.83% (11,837 சதுர கி.மீ) திறந்த வெளிக் காடுகளாகவும் வகைப்படுத்தப் பட்டு உள்ளன.