TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் உள்ள கழுகுகள் குறித்த ஆய்வு 2024

July 17 , 2024 130 days 317 0
  • முதுமலை (MTR) மற்றும் சத்தியமங்கலம் புலிகள் வளங்காப்பகங்களில் (STR) உயிரினங்களின் முக்கிய வாழ்விடங்களில் கழுகு வளங்காப்பு குறித்த விழிப்புணர்வு மீதான ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது.
  • இந்தப் பகுதியில் வாழும் சமூகங்கள் கால்நடைகளை வளர்ப்பதில் "கழுகுக்கு பாதகம் விளைவிக்காத" நடைமுறைகள் குறித்தும் இந்தப் பகுதியில் இந்தப் பறவைகள் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தினையும் இன்னும் முழுமையாக உணரவில்லை.
  • மொத்தமுள்ள நான்கு கழுகு இனங்களில் – வெண்முதுகுக் கழுகு, நீண்ட அலகு கொண்ட கழுகு மற்றும் ஆசிய ராசாளிக் கழுகு ஆகிய மூன்று கழுகு இனங்கள் இந்தப் பகுதியில் காணப் படுகின்றன என்பதோடு இந்த இரண்டு வளங்காப்பகங்களுக்குள் அவை கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் இனங்களாகும்.
  • எகிப்தியக் கழுகு ஒரு வலசை போகும் கழுகு இனம் என்று நம்பப் படுகிறது.
  • ஸ்டீராய்டு சாராத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAID) கிடைக்கப் பெறுவது என்பது கழுகுகளுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது.
  • கீட்டோபுரோஃபென், அசெக்ளோஃபெனாக் மற்றும் நைம்சுலைடு போன்ற கழுகுகளுக்கு தீங்கு விளைவிக்கும் பிற NSAID மருந்துகள் கால்நடை மருந்தகங்களில் இன்னும் கிடைக்கப் பெறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்