மதச் சிறுபான்மையினருக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில், சாத்தியமான இட ஒதுக்கீடுகள் மற்றும் அதிகரித்த கல்விக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர் நடவடிக்கைகளை முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாநில அரசானது, 10 ஆம் முந்தைய வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கான (ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை) உதவித் தொகை திட்டத்தின் கீழ் முஸ்லீம் மாணவிகளுக்கு வக்ஃப் வாரியத்தின் மூலம் நிதி உதவிகளை வழங்கும்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு தமிழ்நாடு சிறு பான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தினால் வழங்கப்படும் கல்விக் கடன் 5 லட்சமாக உயர்த்தப்படும்.
அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கு, ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்.
ஆசிரியர் நியமனத்தில், அரசுப் பள்ளிகளில் தற்போதுள்ள பொதுப்பிரிவு ஆசிரியர் நியமனத்திற்கான 53 வயது வரம்பு மற்றும் இதர பிரிவினரைச் சேர்ந்த ஆசிரியர் நியமத்திற்கான 58 வயது வரம்பு ஆனது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப் படும்.
சமய சிறுபான்மையினர் சான்றிதழ்களில் காலாவதி தேதி குறிப்பிடப்பட மாட்டாது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படும்.
கிராமப் புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நீட்டிப்பதற்கான ஆணை விரைவில் வெளியிடப் படும்.
இஸ்லாமியச் சட்டப்படி திருமணம் செய்து கொண்ட இரண்டாவது மனைவி மற்றும் அவர்களது மகன்கள் மற்றும் மகள்களுக்கு சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வி, மருத்துவம் மற்றும் சமூக இலக்குகளை மேம்படுத்தும் நோக்கத்திற்காக வக்ஃப் வாரியத்திற்கு அதன் நிலங்களை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்க அரசு அனுமதி வழங்கும்.
தற்போது சென்னையில் செயல்பட்டு வரும் தீர்ப்பாயம் போன்று வக்ஃப் வாரியச் சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மதுரையில் ஒரு தீர்ப்பாயத்தினை அமைக்க உயர்நீதிமன்றத்தின் அனுமதியையும் அரசு பெறும்.