TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் சுய ஆட்சி அமைப்புகள்

December 28 , 2024 16 days 107 0
  • சமீபத்தில் குன்றத்தூர் மற்றும் உள்ளாவூர் ஆகிய வட தமிழ்நாட்டின் இரண்டு கிராமங்கள் குறித்து கொள்கை ஆய்வுகள் மையம் (CPS) என்ற ஓர் இலாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுகளை நடத்தியுள்ளது.
  • இது  ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பிருந்தே கிராம அளவில் பரந்த அளவிலான சுயாட்சி நிர்வாக அமைப்புகள் எவ்வாறு இருந்தன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
  • இந்த ஆய்வு 1767 மற்றும் 1774 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், செங்கல்பட்டு ஜாகிர் அமைப்பிற்குட்பட்ட சுமார் 2,000 இடங்களில் ஒரு ஆங்கிலேய இராணுவ அதிகாரியான தாமஸ் பர்னார்ட் நடத்திய ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டது.
  • ஆங்கிலேயர்கள் இந்தப் பகுதியை 1762 ஆம் ஆண்டில் ஆற்காடு நவாப்பிடமிருந்துப் பெற்றனர்.
  • ஜாகிர் அமைப்பிற்குட்பட்ட இந்தக் கிராமங்களின் செயல்பாடு குறித்தத் தகவல்கள், பனை ஓலைகளில் எழுதப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகளில் ‘கணக்குப்பிள்ளைகள்’ என்று அழைக்கப்படும் பாரம்பரிய கணக்குப் பராமரிப்பாளர்களால் குறிக்கப்பட்டுள்ளன.
  • குன்றத்தூரில் சோழர் காலம் முதல் முகலாயர்கள் காலம் வரையிலான சுமார் 55 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன, இது இந்த கிராமத்தின் பல நூற்றாண்டு கால வரலாற்றை எடுத்துரைக்கின்றன.
  • செங்கல்பட்டு ஜாகிர் பகுதி முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட உணவு தானியங்களின் வருடாந்திர உற்பத்தி தனிநபருக்கு ஒரு டன் என்ற அளவில் இருந்தது.
  • இது இன்றைய இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சராசரி அளவினை விட சுமார் ஐந்து மடங்கு அதிகம் ஆகும்.
  • இங்கு விளைபொருட்களின் சில குறிப்பிட்ட பங்குகள் இப்பகுதியில் நிறைந்திருக்கும் நீர்நிலைகளைப் பராமரிப்பதற்கும், அறிஞர்கள், ஆசிரியர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் ஒதுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்