TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் சேர்க்கை விகிதம் 2021-22

February 5 , 2024 165 days 569 0
  • இந்தியாவின் பெரிய மாநிலங்களில், 2017-18 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஐந்து கல்வியாண்டுகளில் உயர்கல்வியில் (கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள்) அதிக மொத்தச் சேர்க்கை விகிதத்தினைக் (GER) கொண்ட மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்கிறது.
  • சமீபத்தில், கல்வித் துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட உயர்கல்வி குறித்த அகில இந்தியக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மொத்தச் சேர்க்கை விகிதம் 47 சதவீதமாக இருந்தது.
  • மொத்தச் சேர்க்கை விகிதம் என்பது உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் (18 முதல் 23 வயதிற்குட்பட்ட தகுதியுள்ள மக்கள்தொகை) எண்ணிக்கையைக் குறிக்கிறது.
  • 2021-22 ஆம் ஆண்டிற்கான காலகட்டத்தில், அகில இந்திய சராசரி மொத்தச் சேர்க்கை விகிதம் ஆனது 28.4 சதவீதமாக இருந்தது.
  • அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில், சண்டிகர் 64.8 % என்ற அளவில் மொத்தச் சேர்க்கை விகிதத்தினைக் கொண்டுள்ளது.
  • அதனைத் தொடர்ந்து 61.5 சதவீதத்துடன் புதுச்சேரியும், 49 சதவீதத்துடன் டெல்லியும் இடம் பெற்றுள்ளன.
  • இமாச்சலப் பிரதேசம் (43.1 சதவீதம்), உத்தரகாண்ட் (41.8 சதவீதம்), கேரளா (41.3 சதவீதம்) மற்றும் தெலுங்கானா (40 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் சிறப்பான செயல் திறனைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்