TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் புதிய சுற்றுச்சூழல் சார் முன்னெடுப்புகள்

June 30 , 2024 12 hrs 0 min 58 0
  • கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கழகத்தில் 10 கோடி ரூபாய் செலவில் உள்நாட்டு விதை இனங்கள் பெட்டகத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • இராமேஸ்வரம் மற்றும் மன்னார் வளைகுடாவில் 15 கோடி ரூபாய் செலவில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா உருவாக்கப்படும்.
  • நாமக்கல் கொல்லிமலையில் இரவு நேர வான்வெளிப் பூங்கா அமைக்கப்படும்.
  • கும்பகோணம் அணைக்கரை வன வரம்பில் 2.50 கோடி ரூபாய் செலவில் முதலை வளங்காப்பு மையம் அமைக்கப்படும்.
  • புகழ்பெற்ற வனவிலங்கு உயிரியலாளர் A.J.T. ஜான்சிங்கின் மரபினை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் ‘டாக்டர் A.J.T. ஜான்சிங் வனவிலங்கு பாதுகாப்பு விருதினை’ உருவாக்க அரசு முன்மொழிந்துள்ளது.
    • வனவிலங்கு வளங்காப்பில் பெரும் பங்களிப்பை வழங்கிய சிறந்து விளங்கும்  வன விலங்கு ஆர்வலருக்கு இந்த விருது வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்