மத்திய சுகாதார அமைச்சகத்தின் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவானது (technical evaluation committee - TEC) தமிழ்நாட்டில் நான்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அமையவிருக்கும் இந்தப் புதிய மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரியும் 150 எம்பிபிஎஸ் இடங்களைக் கொண்டிருக்கும்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையானது 37 ஆக உயர இருக்கின்றது.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன.