தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி 2024
August 15 , 2024 100 days 230 0
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தென் மாநிலங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழக மாநிலம் ஆனது 8,379.19 மில்லியன் அலகு (MUs) புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்துள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 8,400.15 மில்லியன் அலகுகளை விட சற்று குறைவாகும்.
கர்நாடகா மாநிலமானது, கடந்த ஆண்டு பதிவான 10,001.55 மில்லியன் அலகு உற்பத்தியில் இருந்து சற்று குறைவுடன் இந்த ஆண்டு 9,171.16 மில்லியன் அலகுகளை உற்பத்தி செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
4,114.02 மில்லியன் அலகு உற்பத்தியுடன் காற்றாலை ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ள அதே நேரத்தில் கர்நாடகா 3,095.93 மில்லியன் அலகு காற்றாலை ஆற்றலை உற்பத்தி செய்துள்ளது.