தமிழ்நாட்டில் பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் 2023
October 10 , 2023 413 days 653 0
2021-2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதமானது (MMR) ஒரு லட்சம் குழந்தைப் பிறப்புகளுக்கு 90 ஆக உயர்ந்திருந்தது.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, 2022-2023 ஆம் ஆண்டில் இது ஒரு லட்சம் குழந்தைப் பிறப்புகளுக்கு 52 ஆகக் குறைந்துள்ளது.
2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய ஆண்டுகளில் ஏறக்குறைய ஒரே எண்ணிக்கையிlல் சுமார் 9.20 லட்சம் குழந்தைப் பிறப்புகள் பதிவாகின.
2021–2022 ஆம் ஆண்டில் பதிவான 827 பேறுகாலத் தாய்மார்கள் இறப்புகளில் 250 இறப்புகள் கோவிட்-19 காரணமாக ஏற்பட்டவையாகும்.
2022-2023 ஆம் ஆண்டில் பதிவான பேறுகாலத் தாய்மார்கள் இறப்புகளின் எண்ணிக்கை 479 ஆகும்.
மாநிலப் பொது சுகாதார இயக்குநரகம் (DPH) ஆனது, தாய் மற்றும் குழந்தை நலச் சேவைகளை மேம்படுத்துவதற்காக வேண்டி சிங்கப்பூர் சுகாதாரச் சேவைகள் மற்றும் சிங்கப்பூர் சர்வதேச அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து தடுப்பு மருத்துவத் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பினை மேற்கொண்டுள்ளது.
சிங்கப்பூரின் பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் ஆனது ஒரு லட்சம் குழந்தைப் பிறப்புகளுக்கு 10 ஆக உள்ளது.