TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் மகப்பேற்று இறப்பு விகிதம்

July 21 , 2019 1956 days 814 0
  • தமிழ்நாட்டில் மகப்பேற்று இறப்பு விகிதம் (MMR - Maternal Mortality Rate) 6 புள்ளிகள் குறைந்திருக்கின்றது.
  • 2018 ஆம் ஆண்டு மாநில சுகாதார மேலாண்மைத் தகவல் அமைப்புத் தரவின்படி, MMR புள்ளி 1 இலட்சம் குழந்தை பிறப்புகளுக்கு 66-லிருந்து 60 ஆகக் குறைந்துள்ளது.
  • 2030 ஆம் ஆண்டில் 1 இலட்சம் குழந்தைகளுக்கு 70க்குக் கீழே MMR-ஐ கொண்டு வரும் நீடித்த வளர்ச்சி இலக்கினை 2014-16 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு எட்டியுள்ளது.
  • இந்தியாவின் மகப்பேற்று இறப்பு விகிதம் 130 ஆக உள்ளது.
MMR பற்றி
  • மகப்பேற்று இறப்பு என்பது குழந்தைப் பிறப்பு அல்லது கருத்தரித்தலின் போது ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் இறப்புகளைக் குறிக்கின்றது.
  • இது ஓராண்டில் 1 இலட்சம் குழந்தைப் பிறப்புகளுக்கு இறக்கும் பெண்களின் எண்ணிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்