TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் மின் தேவையின் அதிகரிப்பு

December 23 , 2024 2 days 54 0
  • 660-மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய (ETPS) விரிவாக்கத் திட்டம் ஆனது மின் விநியோகக் கட்டமைப்பின் மீது நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், மின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.
  • மாநிலத்தின் மின் தேவை ஒவ்வோர் ஆண்டும் 10% அதிகரித்து வருகிறது.
  • 11,000 மெகாவாட் என்ற காற்றாலை ஆற்றல் உற்பத்தி திறனுடன், தமிழ்நாடு மாநிலம் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • சூரிய ஆற்றல் உற்பத்தி திறன் அடிப்படையில், 9,400 மெகாவாட் திறனுடன் மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அலகுகள் அளவிலான கூடுதல் பசுமை ஆற்றல் திறனை உற்பத்தி செய்வதற்கு மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் எரிசக்தித் தேவையில் 50 சதவீதமானது, பசுமை எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • தமிழ்நாடு பசுமை ஆற்றல் நிறுவனம் லிமிடெட் ஆனது மாநிலத்தின் பசுமை ஆற்றல் உற்பத்தி முன்னெடுப்புகளை மேற்பார்வை செய்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்