TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் மீன்வள விதிமுறைகளை அமல்படுத்துதல் 2025

January 30 , 2025 24 days 83 0
  • ஆலிவ் ரெட்லி கடல் ஆமை (சிற்றாமை) உயிரிழப்புகள் குறித்து மீண்டும் மறு ஆய்வு செய்வதற்காக வேண்டி அமைக்கப்பட்ட பணிக்குழுவானது, இந்த இனங்களின் அதிக உயிரிழப்பு விகிதத்தினை தடுப்பதற்காக என மீன்வள விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளது.
  • இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் பல்வேறு துறைகளின் நிபுணத்துவத்தினை ஒன்றிணைத்து, கூட்டு அணுகுமுறையை மேற்கொள்வதற்காக என இந்தப் பணிக் குழு என்பது உருவாக்கப்பட்டது.
  • இதன்படி அமல்படுத்தப்பட வேண்டிய மூன்று முக்கிய நடவடிக்கைகள்:
    • இழுவை மீன்பிடி படகுகளுக்குத் தடை,
    • மீன்பிடியின் போது ஆமைகள் தப்பிக்க வழி வகை செய்யும் சாதனங்களை (TED) பயன்படுத்துதல், மற்றும்
    • படகு எஞ்சின்களின் குதிரைத் திறன் மீதான கட்டுப்பாடுகள்.
  • 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில கடல் சார் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் ஆனது, ஆமைகள் வலையமைக்கும் பருவத்தில் சில வலையமைக்கும் மற்றும் அவை இனப் பெருக்கம் செய்யும் பகுதிகளிலிருந்து ஐந்து கடல் மைல்களுக்குள் நன்கு இயந்திர மயமாக்கப் பட்ட மீன்பிடி படகுகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது.
  • மீன்பிடி வலைகளில் TED சாதனங்களைப் பயன்படுத்துவதை மிகவும் தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்யவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்