தமிழ்நாட்டில் முதலீட்டு திட்டங்களுக்கான முன்மொழிவுகள் 2024
August 18 , 2024 97 days 160 0
44,125 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் 15 நிறுவனங்களின் முதலீட்டு முன்மொழிவுகள் ஆனது, 24,000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்கார்ப் நிறுவனம் ஆனது தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 21,340 கோடி ரூபாய் முதலீட்டினை செய்து 1,100 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க உள்ளது.
மதர்சன் நிறுவனமானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 2,600 கோடி ரூபாய் முதலீடு செய்து 2,500 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உள்ளது.
மில்கி மிஸ்ட் நிறுவனம் ஆனது ஈரோடு மாவட்டத்தில் 1,777 கோடி ரூபாயும், லோஹம் டெக் நிறுவனமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லித்தியம் மின்கல மறு சுழற்சி முறைக்காக 1,597 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளது.