TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் முதலீட்டு திட்டங்களுக்கான முன்மொழிவுகள் 2024

August 18 , 2024 97 days 158 0
  • 44,125 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதில் 15 நிறுவனங்களின் முதலீட்டு முன்மொழிவுகள் ஆனது, 24,000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • செம்கார்ப் நிறுவனம் ஆனது தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 21,340 கோடி ரூபாய் முதலீட்டினை செய்து 1,100 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க உள்ளது.
  • மதர்சன் நிறுவனமானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 2,600 கோடி ரூபாய் முதலீடு செய்து 2,500 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உள்ளது.
  • மில்கி மிஸ்ட் நிறுவனம் ஆனது ஈரோடு மாவட்டத்தில் 1,777 கோடி ரூபாயும், லோஹம் டெக் நிறுவனமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லித்தியம் மின்கல மறு சுழற்சி முறைக்காக 1,597 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்