தமிழ்நாட்டில் யானைகளுக்கான மீட்பு, சிகிச்சையளிப்பு மற்றும் மறுவாழ்வு மையம்
January 15 , 2024 315 days 255 0
கோவை மாவட்டத்தின் சிறுமுகை அருகே அமைந்த பெத்திகுட்டையில் வனவிலங்குகளுக்கான மீட்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தினை அமைப்பதற்காக 19.5 கோடி ரூபாய் நிதி அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
53 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த அதிநவீன மையம் அமைக்கப்பட உள்ளது.
இது பயிற்சி பெற்ற நிபுணர்களுடன், நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் நோய்க் கண்டறியும் கருவிகளைக் கொண்டிருக்கும்.
மறுவாழ்வு மண்டலம் என்பது நான்கு மண்டலங்களில் மிகப் பெரிய அளவில் ஆனதாகும் என்பதோடு அங்கு தற்காலிகமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட விலங்குகள் அனைத்தும் வைக்கப்பட்டு அதற்கான மறுவாழ்வு சிகிச்சைகளும் அளிக்கப்படும்.
இது சிகிச்சை அளிக்கப்பட உள்ள அனைத்து முக்கிய இனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான ஐந்து பிரிவுகளைக் கொண்டிருக்கும்.