TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கம் 2022-23

May 25 , 2023 552 days 341 0
  • 2022-23 ஆம் நிதியாண்டில் (FY) தமிழ்நாட்டின் முறைசார் தொழில் துறையில் 14,05,171 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இது 2021-22 நிதியாண்டில் உருவாக்கப்பட்ட 12,84,986 வேலைவாய்ப்புகளை விட சுமார் 9.4% அதிகரித்துள்ளது.
  • தமிழ்நாட்டில், 2022-23 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 3,76,872 வேலை வாய்ப்புகளில் 18 முதல் 21 வயதுக்குட்பட்டவர்களின் சேர்க்கையானது அதிகபட்சமாக காணப்பட்டது.
  • 22 முதல் 25 வயதுப் பிரிவில், 2022-23 ஆம் ஆண்டில் 3,6,8981 வேலைவாய்ப்புகள் சேர்க்கப் பட்டுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து 35 வயதுக்கு மேற்பட்டவர் பிரிவில் 2,44,891 வேலை வாய்ப்புகள் சேர்க்கப்பட்டன.
  • மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகியவை மார்ச் மாதத்தில் நிகர ஆட்சேர்க்கையில் முன்னணியில் உள்ள முதல் ஐந்து மாநிலங்களாகும்.
  • ஒட்டு மொத்த நிகர ஆட்சேர்க்கையில் இந்த மாநிலங்களின் பங்கானது 58.68% ஆக இருந்தது.
  • 2021-22 ஆம் ஆண்டில் 10.5% ஆக இருந்த ஒட்டுமொத்த நிகர ஆட்சேர்க்கையில் தமிழகத்தின் பங்கானது 2022-23 ஆம் ஆண்டில் 10.1% ஆகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்