இம்மாநிலத்தில் உள்ள யானை வழித்தடங்களை அடையாளம் காண்பதற்காக தமிழக அரசானது குழு ஒன்றினை அமைத்திருந்தது.
இது 42 யானை வழித்தடங்களின் பட்டியலை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கருத்துகளை கோரியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் யானைகள் வளங்காப்பு திட்டப் பிரிவு பட்டியலிட்ட யானை வழித்தடங்களின் எண்ணிக்கையை விட இந்த எண்ணிக்கை அதிகமாகும்.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தின் பிரிவு 20 வழித் தடங்களை அடையாளம் கண்டுள்ளது: அவற்றுள் 15 மாநிலத்திற்குள்ளே அமைந்த வழித் தடங்கள், ஐந்து கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள காடுகளை இணைக்கும் மாநிலங்களுக்கு இடையேயான பகுதிகளில் அமைந்து உள்ள வழித்தடங்கள் ஆகும்.
2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒத்திசைவு கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 2,961 யானைகள் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 26 வனப் பிரிவுகளுள் 20 வனப் பிரிவுகளில் 9217.13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் யானைகள் பரவிக் காணப் படுகின்றன.