TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் SC/ST பெண்களுக்கான புதிய திட்டங்கள்

June 28 , 2024 20 days 241 0
  • விவசாயக் கூலிகளாகப் பணிபுரியும் நிலமற்ற பட்டியலிடப்பட்ட சாதியினர்/ பட்டியலிடப் பட்ட பழங்குடியினப் பெண்கள் நிலம் வாங்க உதவும் வகையில் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.
  • தகுதியுள்ள ஒவ்வொரு மனுதாரரும் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் அல்லது நில மதிப்பில் 50% மானியம் பெற இயலும்.
  • தற்போது சொந்த வீடுகள் இல்லாத பழங்குடியினச் சமூகத்தினருக்காக 4,500 வீடுகள் கட்டமைக்க 70 கோடி ரூபாய் வழங்கப்படும்.
  • பழங்குடியினர் குடியிருப்புகளை அணுகும் வகையில் 50 கோடி ரூபாய் செலவில் சாலைகள் அமைக்கப்படும்.
  • சிவகங்கை, ஈரோடு, விருதுநகர், கடலூர் மாவட்டங்களில் பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக சுமார் 15 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதிகள் கட்டப்படும்.
  • திருச்சி, மதுரை மற்றும் கோவையில் ‘அமுத சுரபி’ திட்டத்தின் கீழ் 9 கோடி ரூபாய் செலவில் மையப்படுத்தப்பட்ட சமையலறை அமைக்கப்படும்.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர்/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினச் சமூகங்களின் கலாச்சாரம், மரபுகள், இலக்கியப் படைப்புகள், மொழியியல் அடிப்படையிலான தே சபக்தி ஆகியவற்றைக் கொண்டாடுவதற்காக அரசாங்கம் ‘வாழ்க்கை விழா’ ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளது.
  • உயர்கல்வியில் சிறந்து விளங்கும் பட்டியலிடப்பட்ட சாதியினர்/ பட்டியலிடப்பட்டப் பழங்குடியின மாணவர்களுக்கு ‘திறன் சார் படிப்புகளைத் தேர்வு செய்வதற்கான பற்றுச் சீட்டுகள்’ வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்