2018 ஆம் ஆண்டில் 264 ஆக இருந்த தமிழ்நாட்டிலுள்ள புலிகளின் எண்ணிக்கையானது 2022 ஆம் ஆண்டில் 306 ஆக உயர்ந்துள்ளது.
தென் மாநிலங்களில், கர்நாடகாவில் அதிகபட்சமாக 563 புலிகள் உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 306 புலிகள் மற்றும் கேரளாவில் 213 புலிகள் உள்ளன.
மூன்று தென் மாநிலங்களில் பரவியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், 2018 ஆம் ஆண்டில் 981 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கையானது 2022 ஆம் ஆண்டில் 1,087 ஆக உள்ளது.
2006 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பதிவான 76 புலிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடச் செய்கையில், தமிழகத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயர்வானது மற்ற தென் மாநிலங்களை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
கேரளாவில் 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 190 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 213 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் 2018 ஆம் ஆண்டில் 524 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கையானது 2022 ஆம் ஆண்டில் 563 ஆக உயர்ந்துள்ளது.