TNPSC Thervupettagam

தமிழ்ப் புதல்வன் திட்டம்

August 13 , 2024 103 days 695 0
  • தமிழக முதல்வர் அவர்கள் ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று கோவையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • இந்தத்திட்டத்தின் கீழ், மாநில அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணாக்கர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
  • இது மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டத்தினை ஒத்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட திட்டத்தின் மூலம் மொத்தம் மூன்று லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் மொத்தம் 7,72,000 மாணாக்கர்கள் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளிக் கல்வியை முடித்துள்ளனர்.
  • 2022-23 ஆம் ஆண்டில் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மொத்தம் 2,09,365 பெண்கள் பயனடைந்துள்ளனர் என்ற நிலையில் மேலும் 2023-24 ஆம் ஆண்டில் அவர்களின் எண்ணிக்கை 2,73,596 ஆக அதிகரித்துள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டில் இந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயிலும் மாணவிகளுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • மாநிலத்தின் உயர் கல்வியில் பயிலும் ஒட்டு  மொத்த மாணாக்கர் சேர்க்கை விகிதம் நாட்டின் தேசியச் சராசரியினை விட அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்