நவம்பர் 8 ஆம் தேதியில் தமிழ்நாடு தனது முதலாவது “தமிழ் அகராதி தினத்தை” அனுசரித்தது.
இந்நாள் வீரமாமுனிவர் என்றும் அழைக்கப்படும் இத்தாலிய மதகுருமாரான கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கியின் பிறந்த நாளைக் குறிக்கின்றது.
முதல் தமிழ் அகராதியான சதுரகராதியை வெளியிடுவதற்கு அவர் காரணமாயிருந்தார்.
முன்னதாக, மொழி அறிஞர்கள் பயன்பாட்டில் இருந்த சொற்களை ஆவணப்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
அந்த சொற்கள் சேகரிப்பானது ‘நிகண்டு’ என்று அழைக்கப் பட்டது.
வீரமாமுனிவர் பற்றி
வீரமாமுனிவர் 1710 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு வந்தார்.
அவர் லத்தீன் மொழியில் "திருக்குறளை" மொழிபெயர்த்து விளக்கினார்.
தேவாரம், நன்னூல், ஆத்திச்சூடி போன்ற பல முக்கியமான தமிழ் இலக்கியப் படைப்புகளையும் அவர் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்துள்ளார்.
இவரது மிகப்பெரிய கவிதைப் படைப்பு நூல் தேம்பாவணி ஆகும்.
காவலூர் கலம்பகம் (ஒரு சிறிய இலக்கியம்), தொன்னூல் என்ற இலக்கணக் கட்டுரை, சமயப் பரப்பாளர்களுக்கான வழிகாட்டி நூலான வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குருவின் கதை போன்றவற்றையும் அவர் இயற்றியுள்ளார்.