TNPSC Thervupettagam

தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்புகள்

September 23 , 2021 1066 days 624 0
  • சட்டப்பேரவையில் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு இவற்றை வெளியிட்டார்.
  • தமிழ் அறிஞர்களில் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை வழங்கப்படும்.
  • இதன்படி, முனைவர் தொ.பரமசிவன், சிலம்பொலி சு.செல்லப்பன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், புலவர் செ.இராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்.
  • திருக்கோயில்களில், தேவாரம், திருவாசம், நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும்.
  • ’தீராக் காதல் திருக்குறள்’ என்ற பெயரில் ஊடகங்கள் வாயிலாக தீந்தமிழ் நடத்தப்படும்.
  • வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கி ‘தமிழ் பரப்புரைக் கழகம்’ உருவாக்கப்படும்.
  • குறிப்பாக, தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் (Initials) தமிழில் எழுத வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்