TNPSC Thervupettagam

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கான சட்டத்தில் திருத்தம்

March 19 , 2020 1769 days 754 0
  • இந்த மசோதாவின் படி, தொடக்கப்பள்ளி முதல் தமிழ் வழியில் படித்த விண்ணப்ப தாரர்களுக்கு மட்டுமே ‘தமிழ் வழியில் படித்த மாணவர்கள்’ (Persons Studied in Tamil Medium - PSTM) என்ற ஒதுக்கீட்டின் கீழ் நேரடி ஆட்சேர்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட இருக்கின்றது.
  • இந்த மசோதாவானது PSTM மாநிலச் சட்டம், 2010ன் கீழ், பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் தமிழ்நாட்டில் நியமனம் என்பதைத் திருத்தம் செய்ய முயலுகின்றது.
  • 2010 ஆம் ஆண்டில், தமிழக அரசானது PSTM விண்ணப்பதாரர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டை அறிவித்தது.
  • நேரடி ஆட்சேர்ப்பிற்காக PSTM இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் இறுதியாகக் குறிப்பிடப் பட்டுள்ள கல்வித் தகுதியை மட்டும் தமிழ் வழியில் பெற்று விண்ணப்பிப்பதை அரசாங்கம் கண்டதால் இந்த திருத்தமானது கொண்டு வரப்படுகின்றது.
  • உதாரணமாக, குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி பட்டப்படிப்பாக இருப்பின், விண்ணப்பதாரர் பள்ளி மற்றும் கல்லூரியில் ஆங்கில வழியில் படித்திருந்தாலும், தொலைதூரக் கல்வி மூலம் தமிழ் வழியில் பட்டம் பெற்று இருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்