தரங்கம்பாடியில் உள்ள டேனியர் (டென்மார்க் வணிகர்கள்) காலக் கோட்டையில் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுலாத் துறை 3 கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்துள்ளது.
டான்ஸ்போர்க் கோட்டை என்றும் குறிப்பிடப் படுகிற டேனியர் காலக் கோட்டையானது, 1620 ஆம் ஆண்டில் கிழக்குக் கடற்கரையில் அமைந்த தரங்கம்பாடி என்ற கிராமத்தில் கட்டமைக்கப் பட்டது.
இந்தப் பகுதியில் இருந்த டேனியர்கள் குடியேற்றத்திற்கான ஒரு அடித்தளமாக இது செயல்பட்டதோடு, பின்பு இது ஆங்கிலேயர்களிடம் விற்கப்பட்டது.