தரம் குறைந்த நிலத்தின் புத்துயிராக்கம் - 50 லட்சம் ஹெக்டேர் நிலங்கள்
August 29 , 2019 1918 days 587 0
2021 மற்றும் 2030 ஆகிய காலகட்டத்திற்கு இடையே 50 லட்சம் ஹெக்டேர் (5 மில்லியன்) தரம் குறைந்த நிலங்களைப் புத்துயிராக்கம் செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சுமார் 29% (சுமார் 96.4 மில்லியன் ஹெக்டேர்) நிலங்கள் தரம் குறைந்த நிலங்களாகக் கருதப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்தியா “பான் சவாலின்” ஒரு பகுதியாக உருவெடுத்துள்ளது.
பான் சவால் என்பது 2020 ஆம் ஆண்டில் உலகின் 150 மில்லியன் ஹெக்டேர் அழிக்கப்பட்ட காடுகளையும் தரம் குறைந்த நிலங்களையும் 2030 ஆம் ஆண்டில் 350 மில்லியன் ஹெக்டேர் நிலங்களையும் மீட்டெடுப்பதற்கான ஒரு உலகளாவிய முயற்சியாகும்.