TNPSC Thervupettagam

தரம் தெரியாத மற்றும் கண்ணுக்குப் புலப்படாத நீர்ப் பிரச்சினை- அறிக்கை

September 5 , 2019 1781 days 560 0
  • உலக வங்கியானது “தரம் தெரியாத மற்றும்  கண்ணுக்குப் புலப்படாத நீர்ப் பிரச்சினை” என்ற புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • நீரின் தரம் எவ்வாறு மோசமடைகிறது என்பது ஒரு “கண்ணுக்கு புலப்படாத நீர்ப் பிரச்சினை” என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. இது அதிக மாசுபட்ட பகுதிகளில் பொருளாதார வளர்ச்சித் திறனில் மூன்றில் ஒரு பகுதியை அழித்து விட்டது.
  • பாக்டீரியா, கழிவு நீர், ரசாயனங்கள் மற்றும் நெகிழி ஆகியவற்றின் கலவையானது நீரிலிருந்து ஆக்ஸிஜனை அகற்றி, அதை "மக்களுக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் ஒரு விஷமாக" மாற்றும் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

நைட்ரஜன்

  • நீரின் மோசமான தரத்திற்கு நைட்ரஜன் முக்கியமாகப் பங்களித்துள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
  • விவசாயத்தில் உரமாகப் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் ஆறுகள், ஏரிகள் மற்றும் பெருங்கடல்களில் நுழைந்து, அங்கு அது தீங்கு விளைவிக்கும் நைட்ரேட்டுகளாக மாறி உணவுச் சங்கிலியில் நுழைகின்றது.

உயிரியல் ஆக்ஸிஜன் தேவை (Biological Oxygen Demand - BOD)

  • BOD ஆனது ஒரு லிட்டருக்கு 8 மில்லி கிராம் என்ற அளவைக் கடக்கும்போது, அந்தப் பிராந்தியங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 0.83 சதவீத புள்ளிகள் அளவில் குறையும் என்று அந்த அறிக்கை கூறுகின்றது.
  • BOD என்பது தண்ணீரில் எவ்வளவு கரிம மாசுபாடு உள்ளது என்பதற்கான அளவீடு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்