யுனிசெஃப் அமைப்பானது இந்தியாவில் கல்விச் சூழ்நிலைகளின் சிக்கலான பகுப்பாய்வுகளை எளிய முறையில் காட்சிப்படுத்தி மக்களுக்கு வழங்குவதற்காக தரவுகள் காட்சிப்படுத்தல் செயலியை வெளியிட்டுள்ளது.
இந்த செயலியானது, யுனிசெஃப்பின் தொழில்நுட்ப உள்ளீடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இச்செயலி பின்வரும் அமைப்புகளுடன் யுனிசெஃப்பின் கூட்டிணைவால் உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (National Council of Educational Research and Training - NCERT)
கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றிற்கான தேசிய நிறுவனம் (The National Institute of Educational Planning and Administration - NIEPA)
இந்த செயலி, கல்விக்கான ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட தகவல் அமைப்பு (Unified District Information System for Education - UDISE), தேசிய மதிப்பீட்டு ஆய்வு (National Achievement Survey - NAS) மற்றும் மக்கள் தொகை தரவு ஆகியவற்றை பயன்படுத்துகிறது.
இந்த செயலியானது, கல்வித் துறையில் உள்ள இடைவெளிகளை குறிப்பிட்டுக்காட்ட மற்றும் கல்வித்துறை தொடர்பான திட்டங்களை கண்காணிப்பதற்கான ஒரு காட்சிப்படுத்தல் கருவி ஆகும்.
யுனிசெஃப் இந்தியா அமைப்பானது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் கூட்டிணைந்து சிக்சா மேளா தினத்தை நடத்தியது.