TNPSC Thervupettagam

தரவுகளை காட்சிப்படுத்தும் செயலி

May 27 , 2018 2373 days 760 0
  • யுனிசெஃப் அமைப்பானது இந்தியாவில் கல்விச் சூழ்நிலைகளின் சிக்கலான பகுப்பாய்வுகளை எளிய முறையில் காட்சிப்படுத்தி மக்களுக்கு வழங்குவதற்காக தரவுகள் காட்சிப்படுத்தல் செயலியை வெளியிட்டுள்ளது.
  • இந்த செயலியானது, யுனிசெஃப்பின் தொழில்நுட்ப உள்ளீடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இச்செயலி பின்வரும் அமைப்புகளுடன் யுனிசெஃப்பின் கூட்டிணைவால் உருவாக்கப்பட்டுள்ளது.
    • தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (National Council of Educational Research and Training - NCERT)
    • கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றிற்கான தேசிய நிறுவனம் (The National Institute of Educational Planning and Administration - NIEPA)
  • இந்த செயலி, கல்விக்கான ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட தகவல் அமைப்பு (Unified District Information System for Education - UDISE), தேசிய மதிப்பீட்டு ஆய்வு (National Achievement Survey - NAS) மற்றும் மக்கள் தொகை தரவு ஆகியவற்றை பயன்படுத்துகிறது.
  • இந்த செயலியானது, கல்வித் துறையில் உள்ள இடைவெளிகளை குறிப்பிட்டுக்காட்ட மற்றும் கல்வித்துறை தொடர்பான திட்டங்களை கண்காணிப்பதற்கான ஒரு காட்சிப்படுத்தல் கருவி ஆகும்.
  • யுனிசெஃப் இந்தியா அமைப்பானது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் கூட்டிணைந்து சிக்சா மேளா தினத்தை நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்