சமீபத்தில் தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிறுவனமானது (NASA - National Aeronautics and Space Administration) நண்டு வடிவ நெபுலாவின் தரவுப் பேச்சற்ற ஒரு கேட்பொலியைப் பகிர்ந்துள்ளது.
இந்தக் காணொலியானது நெபுலா தனது பல்வேறு நிறங்களை அடிப்படையாகக் கொண்டு இசையாக மாற்றம் பெறுவதைக் காட்டுகின்றது.
இதில் நீல நிழல்கள் பேஸ் என்ற ஒரு ஒலி வகையாகவும் வெள்ளை நிழல்கள் மரக் காற்றுகளாகவும் மாற்றம் பெறுகின்றன.
நெபுலா என்பது ஹைட்ரஜன், தூசு, ஹீலியம் மற்றும் அயனியாக்கப்பட்ட வாயுக்களின் விண்மீன்களுக்கிடையேயுள்ள ஒரு மேகக் கூட்டங்களாகும்.
தரவுப் பேச்சற்ற கேட்பொலி என்பது தரவைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக வேண்டி ஏற்படுத்தப்பட்ட ஒலியின் பயன்பாடாகும்.