TNPSC Thervupettagam

தரவு தேவைகள் மீதான தேசிய அளவிலான பயிற்சிப்பட்டறை

May 10 , 2018 2394 days 746 0
  • தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு தரவுத்தளத்தின் (Disaster Risk Reduction Database) மீதான 2 நாள் பயிற்சிப் பட்டறை புதுதில்லியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
  • இந்த பயிற்சிப் பட்டறையானது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் பின்வருவனவற்றுடன் கூட்டிணைந்து நடத்தப்பட்டது.
    • ஐக்கிய நாடுகள் குழந்தைகள்நிதியம் (UNICEF)
    • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (UNDP)
    • ஐக்கிய நாடுகளின் பேரிடர் குறைப்பிற்கான சர்வதேச யுக்தி (UNISDR)
  • ஒரே மாதிரியான மற்றும் நம்பத்தகுந்த தேசிய அளவிலான பேரிடர் தரவுத்தளத்தை உருவாக்குவதே இந்த 2 நாள் பயிற்சிப் பட்டறையின் முக்கிய நோக்கமாகும்.
  • இந்த தரவுத்தளமானது பேரிடர் அபாய குறைப்பிற்கான சென்டாய் கட்டமைப்பின் (Sendai Framework for Disaster Risk Reduction - SFDRR) இலக்குகளை அடைவதை நோக்கி மேற்கொள்ளப்படும் முயற்சிகளை கண்டறிய உதவி புரியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்