தரவு தனியுரிமை தினம் என அறியப்படும் தரவு பாதுகாப்புத் தினமானது விழிப்புணர்வை அதிகரிக்கவும் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பை ஊக்குவிக்கவும் உலகின் சில பகுதிகளில் ஜனவரி 28 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வானது 2007 ஜனவரி 28 அன்று ஐரோப்பிய தரவு பாதுகாப்புத் தினமாக ஐரோப்பிய மன்றத்தால் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
தற்போது இந்த தினமானது 47 ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வருடாந்திர தினமாக அனுசரிக்கப்படுகிறது.