TNPSC Thervupettagam
April 19 , 2018 2411 days 811 0
  • மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகமானது (Minister of Communications) தர்பன்-அஞ்சல் ஆயுள் காப்பீடு (DARPAN-PLI) எனும் செயலியை அண்மையில் வெளியிட்டுள்ளது.
  • புதிய இந்தியாவிற்கான ஊரக அஞ்சல் அலுவலகங்களின் டிஜிட்டல் முன்னேற்றம் எனும் திட்டத்தை (Digital Advancement of Rural Post Office for a New India-DARPAN) மத்திய அஞ்சல் துறையானது (Department of Posts) துவங்கியுள்ளது.
  • இந்த செயலியானது இந்தியாவில் எந்தவொரு பகுதிகளிலும் உள்ள அஞ்சல் அலுவலகக் கிளைகளில்  அஞ்சல் ஆயுள் காப்பீடு (Postal Life Insurance) மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு  பாலிசிகளுக்கான (Rural Postal Life Insurance policies) சந்தாக்களின்  (Premium(   வசூலிப்பில் உதவும்.
  • ஊரக அஞ்சல் அஞ்சலகங்களை ஆன்லைனில் அஞ்சலக மற்றும் நிதியியல் பரிவர்த்தனைகளை (Postal and  Financial Transactions) மேற்கொள்ள செய்வதற்கு நாட்டில் உள்ள 1.29 லட்சம் ஊரக அஞ்சல் அலுவலகக் கிளைகளை (Rural Branch Post Offices) இணைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்
  • தொலைதூர (Remote) ஊரகப் பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் அஞ்சலக சேவைகளின் தரத்தின் முன்னேற்றத்தினை  இத்திட்டம் உறுதி செய்யும்.
  • அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டமானது (Postal Life Insurance) நாட்டின்  மிகவும் பழமையான ஆயுள் காப்பீட்டுத் தொடக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்